திருப்பூரில் உள்ள பள்ளிவாசலுக்கு சீல் வைக்க எதிர்ப்புதெரிவித்து உடுமலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சாலை மறியல் போராட்டம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இன்று திருப்பூர் மாநகரம் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் அருகே உள்ள பள்ளிவாசல் உரிய அனுமதியின்றி நடைபெறுவதாக,

நடந்து வந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த பள்ளிவாசலுக்கு சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று மாநகராட்சி, வருவாய் துறையினர் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கபட்டு உள்ளனர்.
