BREAKING NEWS

திருப்பூர் அமராவதி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் அமராவதி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் மூலம் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த சூழலில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பேரில் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு தண்ணீர் திறந்து வைத்தனர்.

இதனால் 7520 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.135 நாட்களில் 80 நாட்கள் தண்ணீர் திறப்பு 55 நாட்கள் அடைப்பு என்ற முறையில் நீர் வரத்து மற்றும் நீர் இருப்புக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பின்னர் கால்வாயில் சென்ற தண்ணீருக்கு மலர் தூவீனார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், முன்னாள் எம்எல்ஏ ஜெய ராமகிருஷ்ணன் மடத்துக்குளம் சுங்கார மடக்கு முருகேஷ் மடத்துக்குளம் ஈஸ்வரன் எளையமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து செயற்பொறியாளர் முருகேசன், உதவி செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், உதவி பொறியாளர் ராஜேந்திரன், தாசில்தார் கணேசன், ஒன்றிய குழுத்தலைவர் மகாலட்சுமி முருகன், துணை தலைவர் சண்முகவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )