BREAKING NEWS

திருப்பூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு.

திருப்பூர் மாவட்டத்தில் 6 மையங்களில் நீட் தேர்வு.

திருப்பூர் : மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வு வரும் 17ம் தேதி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேர்வு மையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எழுத, 3 ஆயிரத்து, 900 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக திருப்பூர் மாவட்டத்தில், 6 மையங்களில் தேர்வு நடக்கிறது. திருப்பூர் மண்டலத்துக்குட்பட்ட கே.எம்.சி., பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லுாரி, விஜயமங்கலம் சசூரி இஞ்சினீயரிங் கல்லுாரி, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி, கோபி கலை அறிவியல் கல்லுாரி ஆகிய 5 மையங்களும்,

கோவை மண்டல கட்டுப்பாட்டின்கீழ், கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளியிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்விற்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நேற்று முதல் ஹால் டிக்கெட் வினியோகம் நடந்தது. ‘நீட்’ தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமணி, கே.எம்.சி., பப்ளிக் பள்ளி தாளாளர் மனோகரன் தலைமையில் காங்கயம் டி.எஸ்.பி., குமரேசன்,

மற்றும் குழுவினர் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.சசூரி கல்லுாரி மைய கண்காணிப்பாளர் நந்தகுமார், ஏ.வி.பி., கல்வி குழும தாளாளர் கார்த்தியேகன் உட்பட பலர் பங்கேற்றனர். மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி, கல்லுாரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதா, சமூக இடைவெளியுடன் தேர்வர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா, தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )