திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை ஒன்றியம், இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் மனித குலத்திற்கான யோகா என்பதாகும்.

அதனடிப்படையில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தன்று யோகா செய்வதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி கல்லூரிகளில் சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது. உடல் நலமும் மன நலமும் ஒருங்கிணைந்தால் தான் வாழ்வில் சிறக்க முடியும் என்பதன் அடிப்படையில் இந்த சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு யோகாசனங்களை பற்றியும், பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர் சாவித்திரி மற்றும் ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் எடுத்துரைத்தனர்.

அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் சூரிய நமஸ்காரம், பத்மாசனம் ,பச்சிமோத்தாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்களை செய்தனர். தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்வதன் மூலமாக உள்ள நன்மைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்களுக்கு யோகாசன வகுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
