BREAKING NEWS

திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளியில் 1106 மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

திருவண்ணாமலை பகுதியில் அரசு பள்ளியில் 1106 மாணவ, மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வினியோகம்

செய்தியாளர் துரைசாமி.

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சியின் சார்பில் திருவோத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தரணி குமார் தலைமை தாங்கினார்.

 

துப்புரவு அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். இதில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் கி. ரகுராமன் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார் தொடர்ந்து மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

 

இதே போல ஆற்றங்கரை தெரு நகராட்சி ஆரம்பப்பள்ளி, குமரன் தெரு நகராட்சி ஆரம்பப்பள்ளி, வெங்கட்ராயன் பேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளி  உட்பட 6 அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், கங்காதரன், செந்தில் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துப்புரவு ஆய்வாளர் மதனராசர் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )