திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சி.
![திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சி. திருவள்ளூர் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சி.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/05/WhatsApp-Image-2022-05-26-at-11.24.11-AM-1.jpeg)
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் மண்டபத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்ததான பயிற்சியை சைல்டு லைன் உடன் 1098 கட்டணமில்லா குழந்தைகள் சேவையை செய்து வரும் ஹெல்ப் எ சைல்டு ஆஃப் இந்தியா உடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குழந்தைகள் நல குழு நடத்தியது இப்பயிற்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார்.
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி மாவட்ட குழந்தைகள் நல தலைவர் மேரி ஆக்சில்லா ஹெல்ப் எ சைல்ட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எட்வின் பயிற்சிக்கான நோக்கத்தையும் விவரித்து பயிற்சி தொடங்கப்பட்டது.
மேலும் இப்பயிற்சியில் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிபு தத்தா தாஸ் கலந்துகொண்டு போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் சட்டத்தின்படி குழந்தையின் பல்வேறு வகையான பாலியல் குற்றங்கள் பாலியல் குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட குழந்தை ஒப்புக்கொண்ட பெரியவர்களுக்கு தண்டனை மற்றும் அதிகாரிகளின் பொறுப்பு குறித்து விரிவாக பயிற்சி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சந்திரகாசன் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் காவலர்கள் எழுத்தர்கள் 10-வது வார்டு கவுன்சிலர் பாபு திருவள்ளூர் மாவட்டம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு ஊழியர்கள் குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் வட்டார மருத்துவ அலுவலர்கள் சமூக நலத்துறை முக்கிய சேவிகா கிராம சேவிகா மருத்துவத்துறை சுகாதார செவிலியர்கள் மற்றும் சமூகநல செவிலியர்கள் குழந்தைகளோடு இணைந்து செயல்படும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்
பயிற்சி நிகழ்ச்சியின் வரவேற்பினை திருவள்ளூர் சைல்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர் எலிஷா மோரிஸ் அவர்களும் நன்றி இணை திட்ட இயக்குனர் திருமதி இவாஞ்சலின் ஜெஸி பியூலா அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.