திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் நடத்தும் இலவச திறன் பயிற்சி மையம்.

நமது நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல மத்திய மாநில அரசுகளால் மட்டுமே முடியாது, மக்களாகிய நாமும் தொண்டு நிறுவனங்களும் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டு நிறுவனங்களில் ஒன்றுதான் சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம். நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது அத்தகைய இளைஞர்களுக்கு பல்வேறு வகையான திறன்களை இலவசமாக பயிற்சி அளிக்கும் திட்டத்தை தற்போது சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம் தொடங்கியுள்ளது. இதற்கான கட்டிடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் 5 பெண்களுக்கு முதலாவதாக தையல் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
உளுந்தை கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மையம் அமைந்துள்ளது இதில் ஒன்பதாயிரம் ஸ்கொயர் ஃபீட் அளவில் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் சுவாமி விவேகானந்தா திறன் பயிற்சி மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஊர் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் இழுக்க முடியும் என்ற ஓராசிரியர் பள்ளிகளின் கௌரவச் செயலாளர் திரு கிருஷ்ணமாச்சாரி அவர்களின் கூற்றுப்படி பல்வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியால் திறன் பயிற்சி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இத்திறன் பயிற்சி மையம் மூன்று அடுக்கு தளங்களாக கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு தொண்டு நிறுவனங்கள் நன்கொடை வழங்கி உள்ளது அதில் சூப்பர் ஆட்டோ ஃபோர்ஜ், கோனே எலிவேட்டர் மற்றும் இந்தியா டெவெலப்மென்ட் அண்ட் ரிலீஃப் பண்டு ஆகிய நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

இத்திறன் பயிற்சி மையத்தில் ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பல்வேறு விதமான திறன்கள் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகின்றது அதில் தையல் பயிற்சி, கணினி பயிற்சி, வெப் டிசைனிங், டேலி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், மொபைல் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் ஹார்டுவேர், டிஎன்பிஎஸ்சி, மற்றும் டெட் வகுப்புகள், இருசக்கர வாகன மெக்கானிசம், ஏசி மற்றும் ரெப்ரிஜிரேட்டர் மெக்கானிசம் , பிட்டர், பம்ப் மெக்கானிக், வெல்டிங், எலக்ட்ரிகல், வயரிங், மோட்டார் வைண்டிங், கார்பெண்டரி, ஹவுஸ் பெயிண்டிங் (பெண்களுக்கான சிறப்பு பயிற்சி), மொபைல் சர்வீஸ் இவ் அனைத்து திறன்களும் இலவசமாக கற்றுக் கொடுத்து சான்றிதழ் வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான வழிமுறைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.
இவ்விழாவில் மேகாலியா முன்னால் கவர்னர் திரு.சண்முகநாதன், ஓராசிரியர் பள்ளிகளின் சேர்மன் திரு.வேதாந்தம் ஜி, தலைவர் திரு.K.Nகிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் திருமதி அகிலா சீனிவாசன், கௌரவ செயலாளர் திரு.R.P.கிருஷ்ணமாச்சாரி, திறன் பயிற்சி ஆலோசகர் டாக்டர் வரதராஜன், ஓராசிரியர் பள்ளியின் தலைமை நிர்வாகி டாக்டர் கிருஷ்ணன் திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ராஜ்குமார் ஆய்வு ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமகிருஷ்ணன் செந்தில் விஜயராகவன் அலுவலக ஊழியர்கள் ஆச்சாரியாக்கள் மற்றும் கள மேற்பார்வையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
