திருவைகுண்டம் வட்டம் தெற்கு காரச்சேரியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெற்கு காரசேரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காரச்சேரி பகுதியில் நான்கு இடங்களில் கல் குவாரிகள் அமைப்பதற்கு கனிமவளத் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த அனுமதி பெற்றவர்கள் தங்களுக்கு கீழே 11 நபர்களுக்கு குத்தகைக்கு கல் குவாரிகளை கொடுத்துள்ளனர்.
எனவும் அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் எந்த நேரமும் வெடிகளை வைத்து தகர்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதி வழியாக மக்கள் போக பயப்படுகிறார்கள் அப்பகுதியில் உயர்நிலைப் பள்ளி இல்லாததால் அருகில் உள்ள கிராமமான ராமானுஜம் புதூருக்கு கல்வி கற்க மாணவர்கள் செல்ல வேண்டி உள்ளது.
இதில் 12 மாணவிகள் இந்த கல்குவாரிக்கு பயந்து வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுவோமோ என்ற பயத்தில் படிப்பை இடையிலேயே நிறுத்தி உள்ளனர் என்றும் வாரத்திற்கு 50 லாரிகளில் கற்களை எடுப்பதற்கு கனிமவளத் துறை யிடம் அனுமதி பெற்று தினசரி 500 லாரிகள் மூலம் கல்குவாரியில் இருந்து கற்கள் சட்ட விரோதமாக எடுப்பதாகவும்,..
எனவே சட்டவிரோதமாக சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெற்கு கார சேரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுத்தனர்.