திருவொற்றியூர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவு.., பாதிப்படையும் பொதுமக்கள்.

திருவொற்றியூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சென்னை திருவொற்றியூரில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக எரிவாயு வாசனை அப்பகுதி முழுவதும் பரவி வருகிறது. திருவொற்றியூரை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு கழிவுகளே காற்றில் கலந்து அப்பகுதியில் பரவு வருவதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள மக்கள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் திருவொற்றியூர் ஜீவன் லால் நகர், காலடிப்பேட்டை, சின்ன மேட்டுப்பாளையம், ராஜா கடை மாட்டு மந்தை ஆகிய பகுதியில் எரிவாயு கசிவின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் இதனால் நுரையீரல் பிரச்சனை, சுவாச கோளாறு உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து திருவெற்றியூரை சுற்றியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
ஏற்கனவே சிபிசிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட பொழுது கேஸ் அளவுக்கு அதிகமாக வெளியேற்றப்படாமல் இருக்க வேண்டும் என்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கண்ட்ரோல் யூனிட்டுகளை பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
