BREAKING NEWS

தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு வேப்பூர் ஆட்டுச் சந்தையில் 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

 

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வெள்ளிக்கிழமை தோறும் காலை ஆட்டு சந்தையில் மாலையில் காய்கறி சந்தையும் வேப்பூர் ஊராட்சியின் சார்பில் நடத்தப்படுகிறது. 

 

 

இந்த ஆட்டு சந்தையில் கடலூர் மாவட்டம் வேப்பூர்,திட்டக்குடி,விருத்தாசலம் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரியநெசலூர், சேப்பாக்கம், காட்டுமைலூர், சிறுப்பாக்கம் , அடரி, கழுதூர், கண்டப்பங்குறிச்சி, கொத்தனூர் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராம பகுதியில்,

 

இருந்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் கூடுதல் வருமானத்துக்கு ஆடு வளர்ப்பதை தொழிலாக செய்துவருகின்றனர். அவர்கள் தங்கள் ஆடுகளை வேப்பூர் ஆட்டு சந்தையில் விற்பனை செய்ய சந்தைக்கு எடுத்து வருகிறார்கள். 

 

 

24 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டு சந்தையில் அதிகாலையிலிருந்து ஏராளமான ஆட்டு விற்பனையாளர்கள் குவிந்தனர், ஆடுகளை வாங்க திருச்சி, மதுரை ,சென்னை, பாண்டிச்சேரி, தேனி, நாகை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி , உள்ளிட்ட பல மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஆடுகளை வாங்கி சென்றனர்.

 

அதிகாலை காலை 3 மணி முதல் 9 மணிக்குள் 5 மணி நேரத்துக்குள் 10,000-கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. சுமார் 4 கோடிக்கு மேல் விற்பனை நடந்து உள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )