துன்பம் போக்கும் சனி பகவான்.

பொதுவாக அனைத்துத் துன்பங்களுக்கு ம் சனி தான் காரணம் என்று சொல்லும் வழக்கம் உண்டு.
ஆனால் உண்மையில், பலவித கொடுமை களுக்கும் காரணமாக உள்ளவர் சனி என்று நினைக்க வேண்டாம். சனிபகவான் ஆதிக்கம் கொண்டவர்கள் பட்டறிவு மூலம் வாழ்க்கையில் சிறந்த உயர்ந்த அனுபவங் களை பெற்று உன்னதமாக பிறருக்கு யோசனை சொல்லும் அனுபவசாலிகள் ஆவார்கள்.
சர்வ சக்திகளை பெற்று சாதனை புரியச் செய்வார் சனீஸ்வரர்.ஒரு நியாயமான கிரகம் மனிதர்களின் பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தருவதில் இவருக்கு நிகர்இவரே.
உலகுக் கெல்லாம் ஒளியை அள்ளி வீசும் சூரிய தேவனுக்கும் சுவர்ச்சலாவுக்கும் யமன்,வைவஸ்தமனு, யமுனா என்ற மூன் று குழந்தைகள் உள்ளன. சுவர்ச்சலாவுக்கு சூரியனின் அன்பான அணைப்பு அதீதமா ன உஸ்ணமாகத் தகித்தது.
சுவர்ச்சலாவால் தாங்க முடியவில்லை. தன் நிழலைக் கொண்டு ஒரு உருவத்தை ப் படைத்தாள் அவளுக்குப் பெயர் சாயா தேவி. தான் தவம் முடிந்து வரும் வரை தன் கணவனுக்கு தன்னிடத்தில் மனைவி யாக இருந்து பணிவிடை செய்யும்படி பணிந்து விட்டுப் போய் விடுகிறாள்.
சாயாதேவியும் அப்படியே வாழ்ந்து வருகி றாள்.சாயாதேவிக்கு தப்தி (பத்திரை), சாவர்ணிக மனு, சிருதகர்மா (சனி) என்று மூன்று குழந்தைகள் பிறந்தார்கள். சாயாதேவி தனக்கென்று குழந்தைகள் பிறந்த பின்பு மாற்றாந் தாயைப் போல் நடந்து கொண்டாள்.
சூரியனும் யமனும் அவளை மன்னித்து விட்டார்கள். சூரிய தேவன் சுவர்ச்சலா தேவியைத் தேடிக் கண்டுபிடித்து தீராத காதலுடன் தழுவினான். சூரியனின் காந்த சக்தியால் சுவர்ச்சலா தேவிக்கு அப்பொழுது பிறந்தவர்கள் தான் அசுவினி தேவர்கள்.
இந்நிலையில் சாயாதேவி தன் குழந்தை களுடன் தனியே வசித்து வந்தாள். அதிலு ம் சிருதகர்மாவைத் (சனி) தவிர மற்றவர்க ள் பேரும் புகழும் பெற்றிருந்தார்கள் மேலு ம் சிருதகர்மாகவின் கண்கள் அதீதவீர்யமு ள்ளவை.
எவர்மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். அதனால் சாயாதேவி அவனை வெளியே விடாமல் தன் பக்கத்தி லேயே வைத்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் விண்ணுலகமே கயிலையை நோக் கிச் சென்றது கயிலையில் விநாயகப் பெருமானுக்குப் பிறந்த நாள்.
எல்லோரும் கயிலையில் நடக்கும் விழா வைக் காணச் செல்வதால் தானும் அங்கு செல்ல வேண்டும் என்று சிருதகர்மா அடம் பிடித்தான். சாயாதேவி எத்தனையோ சொல்லியும் சிருதகர்மா கேட்கவில்லை. இறுதியில் பிடிவாதம் வென்றது.
கயிலை மலையின் ஓர் ஓரத்தில் நின்று விழாவைக் கண்டுகளித்து விட்டு வருமா று அன்னை ஆலோசனை சொல்லி அனுப் பி வைத்தாள். கயிலையில் சிருதகர்மா காலடிவைத்ததுமே கயிலை மலை ஒரு குலுங்கு குலுங்கியது.
இதை மலைமகள் பார்வதியும் உணர்ந் தாள். சக்தி,சூரியனின் குமாரன் சிருதக ர்மா இதோ வந்து கொண்டிருக்கிறான் அவன் பார்வைபடா வண்ணம் குழந்தை விநாயகனைப் பார்த்து கொள் என்று சிவ பெருமான் கூற, அன்னை மகன் விநாயக னை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள்.
சக்திக்கு மீறிய கவசம் எது?ஆனால் சிருத கர்மா விநாயகனைப் பார்த்துவிட அவனி ன் பார்வைத் தீட்சண்யத்தால் விநாயகனி ன் தலைதெறித்து விழுந்தது. பார்வதி கதறினாள். சிவபெருமாள் மனைவியைச் சமாதானப்படுத்தினார்.
கஜமுகாசுரனை சம்ஹாரம் பண்ணப் பிற ந்தவன் நம் குமாரன் விநாயகன் அதற்கு சாதாரண முகம் உதவாது யானையின் முகம் தான் வேண்டும் என்று சமாதானம் சொன்னார்.
பைரவனை அனுப்பி வடக்கு திக்கில் தலை வைத்துப் படுத்திருக்கும் யானையி ன் தலையைக் கொண்டு வர சொன்னார். காசி அருகே படுத்துக்கிடந்த யானை ஒன்றின் தலையை பைரவன் கொண்டு வந்து கொடுத்தார்.
அது முதல் விநாயகர் கஜமுகன் ஆனார். புதல்வனின் தலையைப் பார்க்க பார்க்க பார்வதி தேவியாருக்கு பற்றிக் கொண்டு வந்தது. கோபம் கோபமாக வந்தது. கயி லையில் காலெடுத்து வைத்த உன்பாதம் ஊனமாகட்டும் என்று சபித்தாள்.
அன்று முதல் விந்தி நடந்ததார் சனி. ஆ னால் விந்தி விந்தி வீடு திரும்பிய சிருத கர்மாவைக் கண்டு சாயாதேவி வெகுண் டாள். பார்வதியின் மகனான விநாயகனி ன் வயிறு ஓநாய் வயிறாகட்டும் என்று சபித்தாள்.
விநாயகரின் வயிறு பெருத்தது அன்று முதல் விநாயகன் லம்போதரன் ஆனார். ‘சனி என்ற சிருதகர்மா, நீ சிறப்படைய உனக்குத் தவம் ஒன்றே சரியான வழி’ என்று சாயாதேவி மகனுக்கு ஆலோசனை வழங்கினாள்.
உடனே சனி, தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையாகத் தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சி பரமன் காட்சி கொடுத்தார்.‘சிருதகர்மா உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய். இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும் தான்.
மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வரப்பட்டம் சனீஸ்வரனான உனக்குத் தான். நவக்கிர கங்களில் ஸ்திர நிலையும் உனக்குத் தான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும்.
உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்’என்று ஈசன் வரம் அளித்தார். சிருதகர்மா அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாக வும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார்.
