BREAKING NEWS

தூத்துக்குடி   கடைசி நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க 5000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் . கூட்டத்தில் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை மீட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடி   கடைசி நாள் நெய்தல் கலை விழா நிகழ்ச்சிகளை கண்டு களிக்க 5000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர் . கூட்டத்தில் பெற்றோரை தவறவிட்ட குழந்தையை மீட்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் ஸ்பிக் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நெய்தல் கலை விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 300 கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.


கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கணியான் கூத்து, சூபி இசை நிகழ்ச்சி, கைச்சிலம்பம், களியில், பறையாட்டம், இசை நிகழ்ச்சி போன்ற  கலைநிகழ்ச்சிகள் நடந்தன  இந்த நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க 5,000 மேற்பட்ட மக்கள் குவிந்ததால் வளாகமே திருவிழா கோலம் பூண்டது.

கூட்டத்தில் ஒன்றரை வயது சிறுமி ஜெரீஸா தனது பெற்றோரை தவற விட்டு இடைவிடாது அழுதவாறு இருந்ததை கண்ட மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தகவல் தெரிவித்தனர் உடனே குழந்தையை எடுத்து வரச் சொல்லி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது மடியில் அமர வைத்து பெற்றோர் வரும் வரை தனது அரவணைப்பில் வைத்துக்கொண்டார். பின்னர் மேடையில் ஒலிபெருக்கி மூலம் குழந்தையின் பெற்றோர் உடனடியாக வந்து குழந்தையை பெற்று செல்லுமாறு அறிவிப்பு விடப்பட்டது.

சிறிது நேரத்தில் மேடை அருகே வந்த காசிலிங்கம், மதிமலர் தம்பதியினர் தனது குழந்தை தான் என கூறினர். பின்னர் இந்த தம்பதியின் குழந்தை தானா என கைபேசியில் உள்ள புகைப்படத்தை பரிசோதனை செய்த பின்பு ஜெர்ஸாவை பெற்றோரிடம் ஒப்படைத்தார். இது போன்ற கூட்ட நெரிசல்களில் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என குழந்தையின் பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

 நிறைவு விழாவுக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )