BREAKING NEWS

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் 60% நிறைவு பெற்றுள்ளது; கனிமொழி பேட்டி.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி. எம்.எஸ்.நகர், குறிஞ்சி நகர், முத்தம்மாள் காலனி, ரஹ்மத் நகர், ராம் நகர், உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

 

கடந்த ஆண்டு பருவ மழை காலத்தில் சுமார் 10,000 குடியிருப்பு பகுதியில் மழை வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தப் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி பணிகளை முடுக்கி விட்டார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. அளித்த பேட்டியில்,

 

 

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் பணிகள், சாலைகள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன. இவைகள் 60 சதவீதம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

 

மேலும் மின் உந்து மோட்டார்கள் மூலம் தண்ணீர் தேங்கி உள்ள இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது அதன் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

 

பேட்டியின் போது தமிழக சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாரு ஶ்ரீ உட்பட அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )