BREAKING NEWS

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றிற்கு ஐஸ் நிரப்பும்-போது கால் தவறி கடலில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு ஒன்றிற்கு ஐஸ் நிரப்பும்-போது கால் தவறி கடலில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி போலீசார் விசாரணை.

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரது மகன் வினிஸ் அஸ்வின்(18) இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு ஐடிஐ-யில் படித்து வருகின்றார் குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேரமாக தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளுக்கு ஐஸ் நிரப்பும் பணி செய்து வருகிறார்.

 

 

இந்நிலையில் வழக்கம் போல் ஐடிஐ சென்று மாலை பகுதி நேர பணிக்காக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திற்கு வேலை வந்துள்ளார் அப்போது விசைபடகு ஒன்றிற்கு ஐஸ் நிரப்பும் போது படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார் உடனடியாக அங்கிருந்த சக மீனவர்கள் கடலில் குதித்து வினிஸ் அஸ்வினை தேடி கண்டெடுத்து கரைக்கு மேல கொண்டு வந்தனர்.

 

 

ஆனால் அவர் கடலில் விழுந்த சிறிது நேரத்திலேயே பலியாகியது தெரியவந்தது உடனடியாக உடலை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி-யில் குடும்ப சூழ்நிலை காரணமாக பகுதி நேர வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடலில் தவறி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )