தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கோயில் வழிபாட்டில் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தில் கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் இரண்டு சமுதாய மக்களும் வழிபட்டு வந்துள்ள நிலையில் மோதல் போக்கு காரணமாக தற்போது தனித்தனியாக வழிபாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோயில் வழிப்பாட்டில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 100க்கும் மெற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் ஒருதலைபட்சமாக செயல்படும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இரண்டு தரப்பு பொதுமக்களும் கோவிலில் முறையாக வழிபட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
CATEGORIES தென்காசி
