தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் முப்பெரும் விழா.

தென்காசியில் தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் சார்பில் வ உ சி யின் 154 ஆம் ஆண்டு பிறந்த தின விழா, தென்காசி மாவட்டத்தின் 40வது ஆண்டு விழா, சைவ வேளாளர் சமுதாய மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கல்வி ஊக்கத் தொகை வழங்கும் முப்பெரும் விழா தென்காசியில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் வைத்து முப்பெரும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆடிட்டர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற விழாவை மாநில தலைவர் சொக்கலிங்கம் பிள்ளை சங்க கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளரும், மாவட்ட நிர்வாக தலைவருமான கனகசபாபதி பிள்ளை, மாநில பொருளாளர் செண்பகம் பிள்ளை முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட சைவ வேளாளர் சங்க செயலாளர் நாகராஜன் பிள்ளை வரவேற்றுப் பேசி ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் சங்கரநாராயணன் பிள்ளை வரவு செலவு கணக்கு வாசித்தார்.
மருத்துவர்கள் அருணா சுப்பிரமணியன், முத்துக்கணபதி என்ற சுகந்தி, கல்யாணி பரமசிவன், மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி சுப்புலட்சுமி செண்பகம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
பாளையங்கோட்டை தொழிலதிபர் சுப்பிரமணியன் பிள்ளை விழா மேடையில் கப்பலோட்டிய தமிழன் வ உ சி உருவப்படத்தை திறந்து வைத்தார்.
ஈரோடு நடராஜன் பிள்ளை, பாப்பாங்குளம் சிவசங்கர் பிள்ளை, தூத்துக்குடி குற்றாலிங்கம் பிள்ளை, பொதிகை கண்ணன் பிள்ளை, ஆலங்குளம் சிவஞானம் பிள்ளை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட அமைப்பு செயலாளர் அய்யம்பெருமாள் பிள்ளை தொகுத்து வழங்கினார்.
கோயம்புத்தூர் சைவ பெருமக்கள் பேரவை தலைவர் சண்முகம், செயலாளர் சுரேஷ், பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆ. சை. மாணிக்கம் பிள்ளை நன்றியுரையாற்றினார்.