தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே நடைபெற்றது.

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நபிகள் நாயகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு மாநாடு திருச்சி செம்பட்டு அருகே ஜனவரி 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்த செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சிங்காரத்தோப்பு அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ரபீஅஹமது தலைமை தாங்கினார், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், கூட்டத்தின் துவக்கத்தில் மாவட்ட பேச்சாளர் ஆர்.ஒய் ஜாக்கீர் துவக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக நிறுவனத் தலைவர் பி.ஜெய்னுல் ஆபுதீன், மாநில பொதுச்செயலாளர் எ.எஸ் அலாவுதீன், மாநில செயலாளர் உணர்வுஇப்ராஹிம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்,
இந்தக் கூட்டத்தில் செய்தியாளர்களின் சந்திப்பில் பி.ஜெனுல் ஆபிதீன் கலந்து கொண்டு பதில் அளித்தார் அதில் பாஜகவின் சிறுபான்மை அணியில் உள்ள வேலுர் இப்ராஹிம் பொது சிவில் சட்டம் குறித்து பேச தயார் என்று, கூறியது பற்றி கருத்துக்கு பதில் அளிக்கையில்…
நாங்கள் பல வருடமாக விவாதிப்பதற்கு அழைப்பு கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம் யாரும் வரவில்லை வேலூர் இப்ராஹிம் வந்தாலும் அவர் பாஜகவின் சார்பில் வரவேண்டும்…
அல்லது வேறு யார் வந்தாலும் மோடி, அமித்ஷா உட்பட யார் வந்தாலும் பாஜகவின் சார்பில் வரவேண்டும் அந்த விவாதத்தில் தோற்றுப் போனால் பாஜகவின் சார்பில் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். நாங்கள் பொது சிவில் சட்டம் பற்றி விவாதிக்க தயார் என்று கூறினர்.
குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு காரணம் என்ன என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த குறிப்பிட்ட தொகுதியில் பாஜக அதிக வாக்கு பெற்று உள்ளது என்றால் இது சந்தேகத்திற் குரியது மேலும் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உள்ளனர்.
அதுவும் அவர் பணி நிறைவு பெறும் ஒரு நாளைக்கு முன்பாகவே நியமித்து உள்ளனர் என்றால் என்ன காரணம், வாக்குச்சீட்டு முறைதான் சரியான தீர்வாகும் இயந்திரத்தின் மூலம் குறிப்பிட்ட நபர்களை வெற்றி பெற செட்டப் செய்திட முடியும் எனவே இது 2024 காணமுன் நடவடிக்கை என குறிப்பிட்டு கூறினார்.
டிசம்பர் 6 பாபர் பாபர் மசூதி இடிப்பு ஆர்ப்பாட்டம் குறித்து கேள்விக்கு முஸ்லிம்களுக்கு பாபர் மஸ்ஜித் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றாலும் அந்த ஒரு அநியாயத்தை யாரும் மறந்து விடக்கூடாது என்பதற்காக சில அமைப்புகள் டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர் எனவும் கூறினார்.
சிறுபான்மையினருக்கு வழங்கி வரும் உதவித்தொகை பல்வேறு வகையில் நிறுத்தப்பட்டு வருகிறது இது முஸ்லிம்களை புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.