BREAKING NEWS

தேனி அருகே கம்பத்தில் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்

தேனி அருகே கம்பத்தில் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர்

 

தேனி மாவட்டம் கம்பத்தில் ரொட்டி தரமறுத்த வியாபாரியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த 2 பேரைப் போலீசார் கைது செய்தனர் . பாரதியார் நகரை சேர்ந்த சுருளிவேலு என்பவர் மூன்று சக்கர சைக்கிளில் ரொட்டி வியாபாரம் செய்து வந்தார்.

 

இந்நிலையில் , சம்பவத்தன்று கம்பமெட்டு காலனிபகுதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த அவரிடம் , அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் 10 ரூபாய்க்கு 3 பன்ரொட்டி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

 

தொடர்ந்து , மழையால் மின் தடை ஏற்பட்டதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட இருவரும், அப்பகுதியில் கிடந்த மரக்கட்டையை எடுத்து சுருளிவேலுவை சரமாரியாக தாக்கி விட்டு தப்பினர்.

 

சம்பவ இடத்தில் கிடந்த செருப்பை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி , மணிகண்டனையும் , சிறுவனையும் போலீசார் மடக்கி பிடித்தனர் .

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )