தேனி கடைவீதி பகுதிகளில் நகர்மன்றத் தலைவர் சுமிதா,அதிமுக நகர் மன்றக் குழுதலைவர் ஓ.சண்முகசுந்தரம்,நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி கடைவீதி பகுதிகளில் நகர்மன்றத் தலைவர் சுமிதா,அதிமுக நகர் மன்றக் குழுதலைவர் ஓ.சண்முகசுந்தரம்,நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிகடைவீதி பகுதிகளில் நகர்மன்றத் தலைவர் சுமிதா,அதிமுக நகர் மன்றக் குழுதலைவர் ஓ.சண்முகசுந்தரம்,நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போதுகாந்தி சிலையிலிருந்து பெருமாள் கோவிலில் வரையிலான சாலைகளை முழுவதுமாக கான்கிரீட் சாலைகள் அமைக்க வேண்டும் எனவும்,சாலையின் இருபுறமும் சாக்கடைகளை கட்டாமல் பாதாள சாக்கடை மூலமாக குழாய் பதிக்க வேண்டும் எனவும்,கடைவீதி என்ற பெயரை கெளமாரியம்மன் கோவில் தெரு என்று மாற்றம் செய்ய வேண்டும் எனவும்,தானியங்கி மின் விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும்,ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிமுக நகர் மன்றக் குழு தலைவர் ஓ. சண்முகசுந்தரம் கோரிக்கைவைத்தார்.நகர்மன்றத் தலைவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
பெரியகுளம் நகர வியாபாரிகள் சங்க தலைவர் மணிவண்ணன், செயலாளர் விடிஎஸ் ராஜவேலு, சுகாதார ஆய்வாளர் ரங்கராஜ்(ஓய்வு),மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.