தேனி தாலுகா புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்க ஆலோசணைக் கூட்டம் நடந்தது. சங்க உறுப்பினர்களுக்கு மாநில அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

தேனி பெரியகுளம் ரோடு தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு தேனி மாவட்ட தலைவர் முரளீதரன் தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் கணேசன் தேனி தாலுகா நிர்வாகிகள் சீனிவாசகம் மலைச்சாமி செல்வகுமார் சீனிவாசகன் முன்னிலையில் நடந்த கட்டத்தில், தமிழ்நாடு வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் அசோசியேஷன் செயலாளர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கூட்டத்தில் சங்க வளர்ச்சி குறித்துஆலோசிக்கப்பட்டது. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் வசதிக்காக தேனி தாலுகாவை மண்டலம் வாரியாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு மாநில அடையாள அட்டை வழங்கி சிறப்பிக்கப்பட்டது.