தேனி பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தேனி செய்தியாளர் முத்துராஜ்.
தேனி மாவட்டம் தேனி பங்களா மேட்டில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு மூலவர் சுந்தரேஸ்வரருக்கு பச்சரிசி மாவு, பால், தயிர், சந்தனம் திருமஞ்சனம், தேன், இளநீர், பலவகை பழங்கள், திருநீர், பன்னீர் உள்ளிட்டவற்றை கொண்டு 11 சிறப்பு அபிஷேகங்கள் செய்யபட்டது.
பின்னர் சுந்தரேஸ்வரருக்கு நந்தி பகவானுக்கும் துளசி மாலை அருகம்புல் மாலை உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இப்பிரதோஷ விழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக குழு செயலாளர் ராமபாண்டி நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இப்பிரதோஷ விழாவில் பங்களாமேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று சென்றனர்.
CATEGORIES தேனி