BREAKING NEWS

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமம் இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்.

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமம் இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்.

தேனி மாவட்டம் அம்மச்சியாபுரம் கிராமத்தில் விபத்து ஏற்படும் முன் அங்கன்வாடிமையத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை தேனி மாவட்டம் அமச்சியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அங்கன்வாடிமையத்தில் 35 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.இந்த அங்கன்வாடி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் விட்டும் இடிந்து விழும் நிலையில் உள்ளது எனவும் மேலும் அங்கன்வாடி மையத்தில் முறையான மின்சார வசதி குடிநீர் வசதி இல்லை என்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.எனவே குழந்தைகளை அங்கன்வாடிமையத்திற்கு அனுப்பிவிட்டு மிகுந்த அச்சத்துடனும் பயத்துடனுமே தினந்தோறும் இருந்து வருகிறோம்.

 

எனவே குழந்தைகளின் தாய் தந்தையர்கள் இந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஏதேனும் விபத்து ஏற்படும் முன் பழுது பார்த்து முறையான குடிநீர் மற்றும் மின்சாரவசதி எற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (1)
  • comment-avatar

    இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் சிறையில் நீண்ட நெடிய காலம் சிறைவாசம் அனுபவித்து வருபவர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும் தங்களுடைய சிறை தண்டனை பாதியை அனுபவித்து முடித்த மாற்றுத்திறனாளிகளையும் நன்னடத்தை என்ற பெயரில் தமிழக அரசு அவர்கள் எதிர்கால வாழ்வின் நலன் கருதி விடுதலை செய்ய வேண்டும் என அதே போல் ஆயுள் தண்டனை முடித்து அபராதம் கட்ட முடியாத ஏழை எளிய மக்களின் அபராத தொகை ரத்து செய்ய செய்து அவர்களையும் உடல் நலன் கருதி விடுதலை செய்ய வேண்டும் மற்றும் பாதி தண்டனை முடித்துள்ள மாற்றுத்திறனாளிகளையும் விடுதலை
    செய்ய வேண்டும் என்று வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மாநில பொதுச் செயலாளர் ம.நடராசன் அவர்கள் தமிழக அரசு கோரிக்கை விடுத்தார்

  • Disqus ( )