தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு மருத்துவமனையில் தேசிய சித்தா தின விழாவை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டி பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சித்த மருத்துவ தந்தை அகத்தியர் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய சித்தா தின விழாவை கொண்டாடினார்கள்.
பேரூராட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த விழாவில் சித்த மருத்துவ மருந்துகளின் மூலம் பொதுமக்கள் அடையும் பயன்பாடுகளை பற்றியும் சித்த மருந்துகளின் மூலம் ஏற்படும் சிறப்புகளை பற்றியும்
சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் சிராஜுதீன் விளக்கி கூறி ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ பெட்டகத்தை வழங்கினார்கள். விழாவில் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
CATEGORIES Uncategorized