தேனி மாவட்டம் போடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பின் சார்பில் போடி சார்-பதிவாளர் அலுவலகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மு.பிரதீப் போடி செய்தியாளர்.
தேனி, போடி திருவள்ளுவர் திடலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) விடுதலை அமைப்பு சார்பில் போடி நகர் சார் பதிவாளர் அலுவலகத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆவணங்கள் பதிவு செய்ய இலஞ்சம் பெறும் சார் பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரப்பதிவு எழுத்தாளர்களை முறையாக அறிவிப்பு பலகை வைத்து பொதுமக்களுக்கு தெரிவிக்க கோரியும்,
முத்திரைத்தாள் விற்பனை ஸ்டாம்பு விற்பனை நடைமுறையில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி பதியப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க கோரியும்,
போலி ஆவணங்களில் வழியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்து இரத்து செய்திடக் கோரியும் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை பத்திரப்பதிவு அலுவலகத்தில் அடிக்கடி ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்,
போடி நகராட்சிக்கு சொந்தமான சாக்கடை சுடுகாட்டு நிலம் கோவில் நிலம் போன்றவற்றில் போலி ஆவணங்கள் வழியாக தனி நபர்கள் மற்றும் தனி நிறுவனங்கள் பத்திர பதிவு செய்து கொடுக்கப்பட்ட பத்திரங்களை ஆய்வு செய்து ரத்து செய்திடக்கோரியும்,
பத்திர எழுத்தர்களுக்கான கட்டணம் நிர்ணயிக்கக் கோரியும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமையேற்று நடத்திய CPI(ML) Lib கட்சியின் நகரச் செயலாளர் முனைவர்.பொன்.சுப. பாண்டிக்குமார் , RYA மாவட்டச் செயலாளர் S.S.M.உதுமான் அலி, CPI(ML) Lib கட்சியின் மாவட்டச்செயலாளர் K.இளையராஜா ஆகியோர் பத்திரப்பதிவு துறையை கண்டித்து உரையாற்றினார்கள். முன்னிலை வகித்து தோழர்.சிவக்குமார்,CPI(ML) Lib கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
மேலும், RYA மாவட்ட தலைவர் மாணிக்கம், தோழர் S.ஈஸ்வரன், V.ஈஸ்வரன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டு போடி பத்திர அலுவலகம், வருவாய்த் துறையினர், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.