தேனி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மஹாலில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலமைப்பு சார்பாக 17ஆம் ஆண்டு பேரவை கூட்டம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக திண்டுக்கல் மண்டலம் 17 ஆம் ஆண்டு பேரவை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தனியார் திருமண மன்டபத்தில் இரண்டு நாள் கூட்டமாக நடைபெற்றது.
இந்த கூட்டம் திண்டுக்கல் மண்டல பெயர் ஆனந்தன் தலைமையிலும் மாநிலத் தலைவர் கிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கம்பம் நகர தலைவர் மாரிமுத்து வரவேற்புரையும் மற்றும் மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணன் சிறப்புரையும் திண்டுக்கல் மண்டல துணை பொது செயலாளர் பாளையா நன்றியுரையும் வழங்கினர்.
இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்களான ஓய்வூதியத்தை வலியுறுத்தியும் மற்றும் மருத்துவகாப்பீடு வழங்கல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 200க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்