BREAKING NEWS

தேனியில் ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் மீது பாலியல் புகார் கூறி பெண் கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் மீது பாலியல் புகார் கூறி பெண் கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்குள்ளே ரகசிய ரூம்.. உல்லாசம்.. ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளருக்கு எதிராக கடைக்குள்ளே பெண் செய்த காரியம்.!
தேனியில் உள்ள கணபதி சில்க்ஸில் அந்த பெண் அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி வந்த நிலையில் கடையின் உரிமையாளர்கள் அந்த பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

தேனியில் ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளரின் மகன் மீது பாலியல் புகார் கூறி பெண் கடையின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி-மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தின் பிரபல ஜவுளிக் கடையான கணபதி சில்க்ஸ். இந்தக் கடைக்கு தென்காசி, வத்தலகுண்டு, கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன. இந்த ஜவுளிக்கடையின் தேனியில் உள்ள கிளையை தென்காசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் (31) முருகன் நடத்தி வருகிறார். இந்தக் கடையில் மட்டுமல்லாது அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகம் மற்றும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகளும் செயல்பட்டு வருகின்றன.


இந்த கடைக்குள் அமைந்துள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனையகத்தை பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டி யைச் சேர்ந்த சின்னகருப்பன் என்பவரது மகள் மேனகா (29) என்பவர் நடத்தி வருகிறார். அந்த வகையில் கடை உரிமையாளரான முருகனுக்கும் மேனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேனகாவைத் திருமணம் செய்து கொள்வதாக முருகன் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மேனகாவும், முருகனும் கடைக்குள் உள்ள ஒரு அறையிலும், முருகன் தங்கியுள்ள பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள வீட்டிலும் பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் முருகனுக்கும் சின்னமனூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளுமான பிரசன்னா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.


இந்த விவகாரம் அறிந்த மேனகா என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக கடந்த மார்ச் 14-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முருகன் மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் முருகன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த முருகன் தலைமறைவாக இருந்த நிலையில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.


இதனையடுத்து, கைது செய்யப்பட்ட முருகன் ஜாமீனில் விடுக்கப்பட்டார். இந்நிலையில், தேனியில் உள்ள கணபதி சில்க்ஸில் அந்த பெண் அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி வந்த நிலையில் கடையின் உரிமையாளர்கள் அந்த பெண்ணின் கடையை அடித்து நொறுக்கி 35 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடைக்குள்ளேயே தனக்கு நியாயம் கேட்டு கையில் பதாகையுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )