தேர்வு எழுதிவிட்டு திரும்பிய பெண்! விபத்தில் பலி! நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டவர்!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு இளம்பெண், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அரவங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரது மனைவி யோகநாயகி (31). இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பெற்றோர் ஊரான திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கருப்பூர் என்ற கிராமத்திற்கு தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
கடந்த 21-ம் தேதி சனிக்கிழமை மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதினார். தேர்வு முடிந்த பின் பேருந்து ஏறுவதற்காக சாலையை கடந்த போது மின்னல் வேகத்தில் வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.