BREAKING NEWS

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம். 108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.

தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பிரத்தியங்கிரா நிகும்பலா யாகம்.  108 கிலோ மிளகாய் யாகத்திற்கு உபயோகப்படுத்தப்பட்டது.

 

அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர் அம்மன் ஊஞ்சல் சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வெட்டுவானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில் வேலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பக்தர்கள் நிறைந்த திருக்கோயிலாகும். 

 

 

இன்று தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பிரத்யங்கிரா நிகும்பலா யாகம் நடைபெற்றது.

 

 

யாகத்தில் பயன்படுத்த 108 ஹோம பொருட்களும் 108 கிலோ மிளகாயும் 18 வகையான திரவியங்களும் நவ தானியங்களும் 18 லிட்டர் இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தப்பட்டது. 

 

 

அம்மனின் ஸ்வரூபமாகவும் உலகமாகவும் பாவிக்கப்படும் மேருவிற்கு பால் மஞ்சள் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. 

 

 

இதனைத் தொடர்ந்து அம்பாள் திருவீதியுலா வந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது இதில் பெண்கள் பக்தி பரவசத்தில் அருள் வந்து ஆடினர். 

 

CATEGORIES
TAGS