தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா.
தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகில் காழியப்பநல்லூர் தொன்போஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி 14 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் கல்லூரி செயலாளர் டேனியல் ஜெபஸ்டின் தலைமை வகித்தார். கல்லூரி நெறியாளர் ஜெப்ரி ஜெகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ரொசாரியா வரவேறறார்.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.
மேலும் இவ்விழாவில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்டக்குழு உறுப்பினர் துளசிரேகா ரமேஷ், தரங்கை பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி குமரவேல், திமுக பிரமுகர் எம்.ஆர்.ஜே.முத்துக்குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் முதல்வர் வெண்ணிலா நன்றி உரையாற்றினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.