BREAKING NEWS

நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைபெற்றது.

நமது குப்பை நமது பொறுப்பு என்ற விழிப்புணர்வு பேரணி தஞ்சையில் நடைபெற்றது.

தஞ்சை மாநகராட்சி சார்பில் நமது குப்பை நமது பொறுப்பு என்ற தலைப்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் கல்லுரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் நகர் நல அதிகாரி நமச்சிவாயம் உள்ளிட்டோர்.

மாணவர்களிடம் விழிப்புணர்வு உரையாற்றினர் பின்னர் மாணவ மாணவிகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மணிமண்டபம் வரை பேரணியாக வந்தனர் அப்போது வரும் வழிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதைப்போல் பொதுமக்களும் வணிகர்களும் நமது குப்பையை நாமே அகற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )