நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.
![நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள். நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள்.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-01-at-10.50.08-AM-e1654061443183.jpeg)
நரசிங்கன்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது. இதற்காக சாலையோர மரங்களை நெடுஞ்சாலை துறையினர் வெட்டி அதன் வேரையும் முழுமையாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நரசிங்கன்பேட்டை கஸ்தூரி அம்மன் கோயில் எதிர் பகுதியில் இருந்த பழமையான புளியமரம் வெட்டி அப்புறப்படுத்தினர். நேற்று ஜேசிபி இயந்திரம் உதவியோடு மரத்தின் பெரிய அளவிலான வேரினை அகற்றும் பணி நடந்தது.
சுமார் ஆறு அடி பள்ளம் வெட்டி வேரினை அப்புறப்படுத்திய போது கருங்கல்லாலான சிலைகள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த சிலைகளை வெளியே எடுத்தபோது சுமார் மூன்று அடி உயரம் உடைய அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் கருங்கல் சிலைகள் என்பது தெரியவந்தது.
இச்செய்தி பரவியதை தொடர்ந்து நேற்று மாலை நரசிங்கன்பேட்டை பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிலைகளை ஆர்வமுடன் பார்க்க குவிந்தனர்.
CATEGORIES தஞ்சாவூர்