நிலக்கோட்டை அருகே நகல் எழுத்தர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட துள்ளுபட்டியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் சதீஷ்குமார் வயது 37. இவர் நிலக்கோட்டையில் நகல் எழுத்தராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு 37 வயது ஆகியும் திருமணம் ஆகாததால் மனக்குழப்பத்தில் அவ்வப்போது திருமணம் ஆகவில்லையே என்று மன விரக்தியாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழப் பிடிக்கவில்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல் பாளையம் மயானத்தில் பூச்சி மருந்து குடித்து விட்டு இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தந்தை ராமசாமிக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து ராமசாமி நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ்விடம் கொடுத்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இறந்து போன நகல்ழுத்தர் சதீஷ்குமாரை படத்தில் காணலாம்.