நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது
நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 38 பேர் கைது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள நடகோட்டை என்ற கிராம பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒரு தனியார் நிறுவனம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான தொழிற்சாலை அமைத்து வருகிறது. இதற்கு இப்பகுதி கிராம மக்கள் மற்றும் பலதரப்பட்ட தரப்பினர் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் பேச நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருக்கும், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை சட்டமன்றத்தில் மக்களுக்காக பேசாத தை கண்டித்து நேற்று 12 மணி அளவில் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சி நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஜஸ்டின் தலைமையில் சுமார் 38 பேர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர்.

இதை அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு நிலக்கோட்டை சட்டமன்ற அலுவலகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில் முற்றுகைப் போராட்டம் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியினரை உடனடியாக கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
