நிலக்கோட்டை தாலுகாவில் 151 மனுக்கள் பெறப்பட்டன உடனடியாக 60 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் வருவாய் தீர்வாயம் சமபந்தி நடைபெற்றது. இந்த முகாமில் நிலக்கோட்டை , நரியூத்து, பச்ச மலையான் கோட்டை, நிலக்கோட்டை , கோடாங்கிநாயக்கன்பட்டி, நக்கலூத்து ஆகிய கிராமங்களிலிருந்து வீட்டுமனைப்பட்டா, சுற்றுச்சூழல் மேம்பாடு, நிலக்கோட்டையில் சுற்றுச்சாலை அமைத்தல், கூட்டு பட்டா, வாரிசுரிமைப் படி மூலம் பெறக்கூடிய பட்டா உள்ளிட்ட பல்வேறு வகையான 151 மனுக்கள் வரப்பட்டது. மனுக்களில் உடனடியாக 60 மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. இம்முகாமில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மாசாணம், சுகந்தி, கலா,பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
