நீண்ட நாட்களான சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி சென்னை வரை நடை பயணம் – தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.ஷெரிப் பேட்டி.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மலைகோட்டை பகுதி ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம் சரீப் கலந்து கொன்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளாக சிறையில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், சிறைவாசிகள் விஷயத்தில் மத்திய அரசு மாநில அரசை கை காட்டுகிறது மாநில அரசு மத்திய அரசை கைகாட்டுகிறது இடையில் கவர்னர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காக்கிறார், கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தகுதி வாய்ந்த ஆயுள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் நடவடிக்கைகளை கண்காணித்து விடுதலை செய்யலாமா இல்லையா என்று அரசுக்கு பரிந்துரை செய்ய ஆலோசனை உறுப்பினராக முன்னாள் நீதி அரசர் ஆதிநாராயணன் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை ஆயுள் சிறைவாசிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை,.
அதே போல் 30ஆண்டுகள் கழித்த இஸ்லாமிய சிறைவாசிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த கொடுமைக்கு எதிராக தமிழக அரசின் கவனத்தை சிறைவாசிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆகஸ்ட்15ஆம் தேதி 75 வது சுதந்திர தினத்தன்று திருச்சியில் இருந்து சென்னை சட்டமன்றம் வரை மக்கள் திரள் நடைபயணம் சென்று முதல்வரை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம்.
அண்டை மாநிலமான ஆந்திர, தெலுங்கான, மேற்குவங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்
8ஆண்டு முதல் 10.ஆண்டு வரை தண்டனை பெற்ற சிறைவாசிகளை விடுதலை செய்து இருக்கிறார்கள், திராவிட மாடல் என்று சொல்லும் அரசுக்கு பக்கத்து மாநிலத்தில் நடைபெற்ற இதை கண் திறந்து பார்க்க வேண்டும்.
தமிழகத்திலும் விடுதலை செய்யப்பட வேண்டும், குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீகாந்தி கொலை வழக்கில் உள்ள நபர்களையும் சேர்த்து விடுதலை செய்யப்பட வேண்டும், இந்த முக்கிய கோரிக்கை முன்வைத்து தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுகூட்டடங்கள் மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது,
ஆகஸ்ட் 15-ம் தேதி சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தோழமை கட்சிகள் இயக்கங்கள், சமூக அமைப்புகள் இனைந்து சென்னை நோக்கி நடைபயணமாக செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருச்சியில் இருந்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா, மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா, துணைச் செயலாளர் முபாரக், சமயபுரம் பகுதி செயலாளர் பாருக், மற்றும் பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
