BREAKING NEWS

நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !

நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்த அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர்சுப்பிரமணியன் !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன், கிராமங்களுக்குச் சென்று ‘நெல் தூற்றி’ விவசாயிகளிடம் வாக்குகளை சேகரித்தார்.

செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் அடுத்த சுமங்கலி, கானகம், திருப்பனாமூர், வெங்கட்ராயன் பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் விவசாயிகளிடம் சென்று ‘நெல் தூற்றி’ இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

முன்னதாக வேட்பாளருக்கு காரிய பெருமாள் கோவிலில் பூரண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கிராம மக்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க., சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளை குறித்து கிராம மக்களுக்கு வேட்பாளர் விவரித்தார்.

வெம்பாக்கம் மேற்கு செயலாளர் வயலூர் ராமநாதன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் திருமூலன் ( எ ) பையா குட்டி , அரங்கநாதன், சீ.துரை, மாவட்ட மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்பராயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல் தூற்றி விவசாயிகளிடம் ஓட்டு சேகரித்த முக்கூர் சுப்பிரமணியனை விவசாயிகளும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS