BREAKING NEWS

நெல்லூர் டூ கடலூர் ஆரஞ்சு அலர்ட்…. தமிழ்நாட்டில் கனமழை வானிலை மையம் அறிவிப்பு..

நெல்லூர் டூ கடலூர் ஆரஞ்சு அலர்ட்….  தமிழ்நாட்டில் கனமழை வானிலை மையம் அறிவிப்பு..

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சி அலர்ட் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் வட கிழக்கு பருவமழையும் கொட்டித்தீர்ப்பது வழக்கம்.

 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழை சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிகம் பொழியும் ..

 

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பின. தென்மேற்குப் பருவமழை காலம் நிறைவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட கிழக்கு பருவமழை காலம் தொடங்க இருக்கிறது.

 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழைக் காலத்தின் 4 வது நாளான நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

அதேபோல் கேரளா, மாஹே, ராயலசீமா பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என்று எச்சரிகப்பட்டு உள்ளது.

 

ஆரஞ்சு அலர்ட் அதே நாளில் கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, கேரளா, மாஹே, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த நாளில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டிற்கும் கடலோர ஆந்திராவுக்கும் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

 

இதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தின் 5 வது நாளான நவம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா பிரதேசம், ஏனாம் ஆகிய பகுதிகளில் கனமழையும், கேரளா, மாஹே, ராயலசீமா ஆகிய பகுதிகளில் பரவலான இடங்களில் மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

கடலோர ஆந்திரா, ஏனாம், ராயலசீமா, கேரளா, மாஹே, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எச்சரித்து.

 

உள்ள இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம், அன்றைய தினமும் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நெல்லூர் முதல் கடலூர் வரை கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

 

வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டுகளில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பெரு வெள்ளங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. அதேபோல் மோசமான புயல்களும் தாக்கியுள்ளன.

 

கடந்த ஆண்டும் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )