நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது குட்டியானை வாகனம் மோதி விபத்து ஒருவர் பலி.

நெல்லை மாவட்டம் சீலாத்திகுளத்தில் வீட்டு வாசலில் பேசிக்கொண்டிருந்த பெண்கள் மீது குட்டியானை வாகனம் மோதி விபத்து ஒருவர் பலி.
மூவர் படுகாயம்; வாகன ஓட்டுனரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்..
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே கும்பிகுளம் ஊராட்சி சீலாத்திகுளம் கிராமத்தில் நேற்று நடந்த திருமண வீட்டின் வாசலில் அருகே சில பெண்கள் எப்போதும் போல் பேசிக்கொண்டிருந்தனர் இரவு 10.00மணிக்கு அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத குட்டியானை வாகனம் பேசிக்கொண்டிருந்த நபர்கள் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பிரேமா க/பெ.சுடலை(47) கல்யாணி க/பெ.கணேசன்(45) காளிஸ்வரி(25) ஜோதி(35) நான்கு நபர்களுக்கு அடிபட்டது. இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வழியில் பிரேமா இறந்துவிட்டார். கல்யாணி என்பவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் ஜோதி மற்றும் காளிஸ்வரி சிறு காயங்களோடு தப்பினர்.
இதுபற்றி இராதாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் இறந்தவர் உடலை கைபற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என்று இன்று இறந்தவர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ராதாபுரம் செல்லும் சாலையில் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.