BREAKING NEWS

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலய 94ம் ஆண்டு தேரோட்ட திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லை செய்தியாளர் மணிகண்டன்.

 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ளதெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியார் ஆலயம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.
திருவிழாஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருப்பலி நடைபெற்றது.

 

 

மாலையில் தேரோட்ட திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. கொடியை அருட்தந்தை ஜெபநாதன் அர்ச்சித்து ஏற்றி வைத்தனர் தொடர்ந்து வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் மறையுரை வழங்கினார்.

 

 

நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் மறையுரையும் திருப்பலியும் நற்கருணை ஆசீரும் நடக்கிறது.

 

 

வரும் 16ம்தேதி 9ம்திருவிழாவன்று இரவு புனித அந்தோணியார் தேரில் ரத வீதியில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த், திருத்தல அதிபர் ஜெரால்ட் ரவி, பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS