நெல்லை ராதாபுரம் ஒன்றியம் கூத்தன்குழி தொன் போஸ்கோ கல்வி நி றுவனங்கள் சார்பில் விளையாட்டு விழா.

திருநெல்வேலி மாவட்டம்
இராதாபுரம் ஒன்றியம், கூத்தன்குழியில் இயங்கிவரும் தொன் போஸ்கோ கல்வி குழுமத்தின் பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி, தொன் போஸ்கோ சமுதாய கல்லூரி, புனித கித்தேரி உயர்நிலை பள்ளி ஆகியவற்றின் 2022 ம் ஆண்டுக்கான விளையாட்டு விழாவானது கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக்கில் வைத்து நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக விஜயாபதி ஒன்றிய கவுன்சிலர் ஆவுடை டி.பாலன், கூத்தன்குழி ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, கூத்தன்குழி ஒன்றிய கவுன்சிலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களையும், வெற்றிச் சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்து கூறி சிறப்பித்தனர்.
கூத்தன்குழி தொன் போஸ்கோ கல்வி குழுமத்தின் செயலாளர் அருட் தந்தை ஆல்பர்ட் ஜான்சன், பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கண்ணன், துணை முதல்வர் ஒசாலிகான், பொருளாளர் அருட் தந்தை ஆன்றோ பலவேந்திரன், நெறியாளர் அருட் தந்தை டோமினிக் சேவியர், மற்றும் புனித கித்தேரி உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சகோதரர் எட்வின் ஆரோக்கியதாஸ் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
மேலும் இவ்விழாவில் அசிரியர்கள், அலுவலக மற்றும் இதர ஊழியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
