நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று 3-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் டி.ஆர். லோகநாதன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலை வைத்தார்.

அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர காங்கிரஸ் தலைவர் கே.மிர்சாவூதீன், ஹுமாயூன் கபீர், வட்டார தலைவர் பாலதண்டாயுதம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன் மாவட்ட மஹிளா காங்கிரஸ் தலைவி ஜீவா, மாவட்ட நிர்வாகி சுபா, மாநகர நிர்வாகிகள் நெல்சன், ஜெயபால், தியாகராஜன், சிவகுமார், மணிராஜ், பழணி, முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
