நோய் தொற்று ஏற்படும் அபாயம் அறியாமல் கழிவுநீர் கால்வாயில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் .

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முதல் மில்லத் நகர் வரை உள்ள முக்கிய சாலைகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரும் பணியை பேரூராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் கொண்டு செய்து வரும் நிலையில்,
ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வார முடியாத இடங்களில் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் முகக் கவசம் அணியாமலும் துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் கால்வாயில் இறங்கி பணியாற்றுவதால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும்,
துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் எங்கே என கேள்வி எழுப்பிய சமூகஆர்வலர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் மாதந்தோறும் பாதுகாப்பு உபகரணம் வாங்கப்பட்டதாக எழுதி எடுக்கப்படும் பணம் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.