பத்திரிக்கையாளர் டாக்டர் எஸ்.கதிரேசனுக்கு செ.கு. தமிழரசன் விருது வழங்கி கெளரவிப்பு.

வேலூர் எத்திராஜம்மாள் மணியம் பாலசுந்தர் திருமண மண்டபத்தில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் கவிஞர் க.இராமஜெயம் தலைமை வகிக்க, வேலூர் மாவட்ட தலைவர் இரா.சி.தலித்குமார் வரவேற்புரையாற்ற , பூமியா டி.அசோக்குமார், எஸ்.தயாளன், பி.சிவக்குமார், கே.தமிழ் குசேலன், பி.மணவாளன், எஸ்.ராஜாராம், ஆர்.சேகர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களான பி.ஏகம்பரம், பி.தன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க முப்பெரும் விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க துணைத் தலைவரும், மக்கள் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் கிழக்கு மண்டல தலைவருமான டாக்டர் எஸ்.கதிரேசனுக்கு இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில தலைவர் முனைவர் செ.கு.தமிழரசன் விருது வழங்கி கெளரவித்து பாராட்டினார்.
இந்த விழாவில் வழக்கறிஞர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் பிரபு, மாநில இணைப் பொதுச் செயலாளர் கே.மங்காபிள்ளை, மாநில பொருளாளர் சி.எஸ்.கௌரிசங்கர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
