பரனிஸ்பூரம் பூங்காவில் நடைபாதை அடிக்கல் நாட்டு விழா வேலூர் எம்.பி துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம் 1வது மண்டலம் 3வது வார்டுக்கு உட்பட்ட பர்னிஸ்வரம் பகுதியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு காட்பாடி பர்னிஸ்வரம் பூங்காவில் பொதுமக்களுக்கு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பூங்காவில் உள்ள நடைபாதையில் மின்விளக்கு அமைக்கும் பணி வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவன் அடிக்கல் நாட்டினார்
இவ்விழாவை 3வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஏற்பாடு செய்தார்.
இந்நிகழ்வில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் துணை மேயர் சுனில் குமார் 1வது மண்டல தலைவர் புஷ்பராஜ் வன்னிய ராஜ் 1வது மண்டல இளநிலை பொறியாளர் செந்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES வேலூர்
