பரிதவிக்கும் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் அலட்சியம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவி வீரலட்சுமி.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா கீழ சத்திரம் என்ற கிராமம் 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பங்கள் பொதுமக்கள், இங்கு 70 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்து வருகிறார்கள்.
அன்றிலிருந்து இன்றுவரை இந்த மக்களுக்கு நேரிடும் அவல நிலைகள் காதுகொடுத்து கூட கேட்கவில்லை அரசு அதிகாரிகள் முதல் ஊராட்சி மன்ற தலைவர் வரை பரிதவிக்கும் கிராம மக்கள்.
அடிப்படை வசதி இல்லாத மயானத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிணத்தை எரிக்கக் கூடிய கட்டிடம் கூட இல்லாமல் பரிதவிக்கும் இப்பகுதி கிராம மக்கள்.
இங்கு உள்ள மயானத்தில் அடிப்படை வசதிகள் தண்ணீர் வசதி காத்திருப்போர் இருப்பிடம் ரோடு வசதி மின்விளக்கு வசதி போன்றவை இல்லை இரவு நேரங்களில் பிணத்தை தூக்கி கொண்டு கரடு முரடான பாதைகளில் தான் தூக்கிச் செல்கின்றன அவல நிலை ஏற்படுகிறது.
எந்த ஆட்சி காலத்தில் கூட செவிசாய்க்காமல் இருக்கும் அரசு அதிகாரிகள் பிணத்தை வெறும் தரையில் குழிதோண்டி மட்டுமே புதைக்கும் இந்த அவலம் இங்குதான் நேரிடுகிறது.
மயானத்துக்கு செல்லம் அண்ட் ரோடு கரடுமுரடான பாதைகள் மற்றும் முள்வேலி களால் சூழ்ந்த வண்ணமாக இருக்கிறது மிகவும் சிரமமாக கருதப்படுகிறார்கள் கிராம மக்கள்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கிராமப்புறங்களுக்கு என்ன தேவை என்று எட்டிக்கூடப் பார்க்காத மாவட்ட ஆட்சியர் அன்று முதல் இன்று வரை இந்த ஊரில் நடக்கும் பரிதாப நிலையை கூட அவர் கண்களில் படும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை காரணம் எதுவும் சொல்லாமல் இந்த கோரிக்கையை நிறைவேற்றப்படுமா என கிராம பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.