BREAKING NEWS

பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எருக்கூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளதுஇங்கு வாரந்தோறும் காட்டும ன்னார்கோவில், சிதம்பரம், சீர்காழி, கொள்ளி டம், வைத்தீஸ்வரன் கோயில் திருவெண்காடு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி விவசாயிகள் கொண்டு வந்த பருத்தி இன்று ஏலம் விடப்பட்டு, ஏலத் தொகை அறிவிப்பு ஒட்டப்பட்டது. ஏலத்தில் அரசு 1குவிண்டாலிற்கு நிர்ணயத்த விலையை விட மிக குறைவாக குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ 5 ஆயிரம் வரை மட்டுமே வியாபாரிகளால் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனால் இரவு, பகலாக கண்விழித்து ஏல விற்பனைக்காக காத்திருந்த விவசாயிகள் ஆத்திரம் அடைந்து பருத்தி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகை யிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு நிர்ணயித்த விலையை நிர்ணயிக்கக் கூறி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒன்று கூடி சாலை மறியல் செய்தனர். தகவல் அறிந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார்மற்றும் கொள்ளிடம் போலீசார் விரைந்து வந்து விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை யில் வரும் வாரங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விலை நிர்ணயம் செய்யப்படும் எனவும், பகல் நேரத்தில் ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை யடுத்து பருத்தி விவசாயிகள் போராட்டத்தை கைவி ட்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )