பருத்திக்குடிக்கு பாதை அமைத்து தரவேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பரமசிவபுரம் பருத்திக்குடி செல்லும் நாட்டாறு பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது தற்பொழுது ஆறு மாத காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை இதனால் பொதுமக்கள் இரண்டரை கிலோ மீட்டர் சுற்றி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வூரில் இருந்து அவசர உதவிக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு வாகனம் வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது தினமும் வேலைக்கு செல்வோரும் மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பள்ளிக்கூடத்திற்கு சுற்றி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து ஸ்ரீ கண்டபுரம் கடைவீதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக சாலை மறியல் நடைபெற இருந்தது பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஆர்ப்பாட்டமாக மாறியது அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஒரு வாரத்திற்குள் குத்தாலம் வட்டாட்சியர் தலைமையில் பி டி ஓ நெடுஞ்சாலைதுறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பாலம் அல்லது தற்காலிக சாலை அமைக்கலாமா என்று முடிவெடுத்து செய்து தருவதாக எழுத்து மூலம் உறுதி அளித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.