பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது

பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.மேற்கண்ட இடங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வேகத்தடை அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் அவசரகதியில் பெயரளவிற்கு தரமில்லாமல் வேகத்தடை அமைக்கப்பட்டதாலும் வேகதடைக்கு இருபுறமும் வெள்ளை கோடுகள் வரையாமல் இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று நமது கண்டனத்தை தெரிவித்து மாவட்ட ஆட்சியர்ரை நேரில் சந்தித்து விளக்கத்தை சொல்லி புகார் மனு வழங்கியிருந்தேன்.


ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பணிகளை தரமாக செய்து கொடுத்தார்கள்.எங்கள் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அனைவருக்கும் கரைப் புதூர் ஊராட்சி பொது மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . மக்கள் பணியில். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 திருமதி.எம்.மல்லிகா முருகதாஸ் , மக்கள் பிரதிநிதி, வளர்ச்சி குழ உறுப்பினர், கரைப்புதூர் ஊராட்சி.
