BREAKING NEWS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமமுக சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தமமுக சார்பாக தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி தேனி மாவட்ட பொருளாளர் வேந்தர் பாலா தலைமையிலும் மள்ளர் பாலா முன்னிலையிலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

 

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ளஅரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ மாணவிகள் செல்லும் பொது பாதையை அடைத்து வைத்ததை அகற்றக் கோரியும் ,எம்ஜிஆர் நகர் பகுதியில் உள்ள 19 மற்றும் 20 வது வார்டு பகுதி அனைத்து பொது மக்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரியும்,

 

தேனி பாரஸ்ட் ரோடு ரயில்வே கேட் சாலையில் இருந்து இருப்பக்கமும் கார் வேன் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க கோரியும், தேவேந்திரகுல வேளாளர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்றக் கோரியம் , தமிழக அரசு மின் கட்டண உயர்வை குறைக்க கோரியும்,

 

 

தேனி மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் இயங்கும் தனியார் மதுபான பார்களை அகற்ற கோரியும் , உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

 பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூதன முறையில் மனுக்களை தலையில் சுமந்து கொண்டு சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )