பள்ளியில் சிறுமி பாலியல் பலாத்காரம்!! மாடியில் இருந்து குதித்து கவலைக்கிடம்!!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுவதில் இருந்து தப்பிக்க பள்ளிக்கூட மாடியில் இருந்து குதித்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் ஒடிசாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜாஜ்பூர் சுகிந்தா குரோமைட் பள்ளத்தாக்கில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு தனது அண்ணனுடன் சிறுமி சென்றுள்ளார். அப்போது திடீரென்று மழை பெய்ததால், அந்த வழியாக வந்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தடுத்தது. பின்னர் அருகில் உள்ள பள்ளியில் சிறிது நேரம் தங்கிவிட்டு மழை நின்றதும் செல்லுமாறு கூறியுள்ளனர்.

சிறிது நேரத்தில் பள்ளிக்குள் திடீரென்று நுழைந்த 5 பேரும் சிறுமியின் அண்ணனை அங்கிருந்து அடித்து துரத்திவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயற்சித்தனர். அவர்களிடம் தப்பிக்க முயற்சித்த சிறுமி என்ன செய்வதென்று தெரியாமல் பள்ளிக்கூட மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். அடித்துவிரட்டப்பட்ட அண்ணன் கூச்சலிட்டாதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமி ரத்த வெள்ளத்தில் காயமடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் உடனடியாக சிறுமியை மீட்டு கலிங்கா நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிக்கவே பள்ளி மாடியில் இருந்து குதித்துள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்துள்ளோம் என்று கலிங்கா நகர் காவல் நிலைய ஐஐசி பிபி ரவுட் தெரிவித்தார்.வட மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருவது குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
